search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைசூரு தசரா விழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
    • மைசூரு அரண்மனையில் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கர்நாடகா:

    கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மன்னர் காலம் தொட்டு கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா 413 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 414-வது ஆண்டாக இந்த ஆண்டு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதனால் மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை வழக்கமான கொண்டாட்டத்துடன் நடந்தது. இதற்கிடையே மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்த பூஜைகளை அரண்மனை மன்னர் யதுவீர் தலைமையில் தொடங்கி அதைத்தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நவராத்திரி விழா, தசரா விழாவையொட்டி மன்னர் யதுவீர் தர்பார் நடத்துவதற்காக தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிம்மாசனத்துக்கு அரண்மனை முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் ராஜ உடையில் வீரநடைபோட்டு மன்னர் யதுவீர் தர்பாருக்கு வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

    மைசூருவில் குவிந்த பொதுமக்கள்

    மைசூருவில் குவிந்த பொதுமக்கள்

    இந்த நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளியதும் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யூ என்ற யானை தலைமையில் 14 யானைகள் மைசூரு நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக மண்டபம் வரை சென்றடையும்.

    பின் விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த விழாவை காண மைசூருவில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரெயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் திகழ்கிறது.
    • இந்திய கலாச்சாரத்திற்கு மைசூரு தசரா விழா பெருமை சேர்க்கிறது.

    ஹூப்ளி:

    கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். தெய்வீக திருவிழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உள்ளது என்று அவர் கூறினார். மைசூரு தசரா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விழா என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர், ஹூப்ளியில் நடைபெற்ற பூர சன்மனா பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவருக்கு 900 கிராம் எடை கொண்ட ஸ்ரீசித்தரோட சாமி சிலையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பரிசளித்தார். 


    விழாவில் பேசிய திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது:- நீங்கள் பாராட்டியது இந்திய குடியரசுத் தலைவரை மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாராட்டியுள்ளீர்கள். இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடையக்கூடிய நேரம் இது. அனைவரும் இதற்கு இணைந்து செயல்படவேண்டும். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றவேண்டும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    கணினி ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் துறையில் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 53 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்ததுள்ளது. இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தார்வாட்டில் உள்ள தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.

    • ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டு மைசூரு தசரா விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 412-வது தசரா விழாவாகும்.

    கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டதால், இந்த ஆண்டு தசரா விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மைசூருவில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    ஆண்டுதோறும் மைசூரு தசரா விழாவை முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அதாவது மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்கள் தூவி சிறப்பு பூஜை நடத்தி விழாவை பிரபலங்கள் தொடங்கிவைப்பார்கள்.

    இந்நிலையில், மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க இருப்பதாக கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    இந்த ஆண்டு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க வருகை தருவதால், மைசூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசாருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

    ×